தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் நாளை திறந்து வைக்கிறார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2023      தமிழகம்
Ma-Suphramanian 2021 12-06

Source: provided

சென்னை : சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை 15-ம் தேதி திறந்து வைக்கவுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை  கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்காக அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில் ஜனாதிபதியின் வெளிநாடு பயணத்தால், மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி ஜனாதிபதி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், ஜனாதிபதி வராததால், இந்த மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 

இந்த மருத்துவமனை ரூ. 230 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ரூ. 146 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மருத்துவமனையைத் திறந்து வைக்க வருமாறு ஜனாதிபதியிடம் நேரம் கேட்கப்பட்டது. அவரும் வருவதாகத் தெரிவித்தார். ஆனால், இப்போது எந்த பதிலும் இல்லை. 

தயார் நிலையில் உள்ள மருத்துவமனையை நீண்டநாட்களாகத் திறக்காமல் இருப்பது சரியாக இருக்காது. அதனால், நாளை 15-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையைத் திறந்து வைக்க இருக்கிறார் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து