முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவக் கல்லூரிகள் குறித்து விமர்சனம்: ஜெய்ராம் ரமேசுக்கு தமிழிசை கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      தமிழகம்
Tamilsai 2023-11-03

Source: provided

சென்னை : மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்து உள்ளதாக விமர்சனம் செய்த ஜெய்ராம் ரமேசுக்கு- தமிழிசை  கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகத்தை 3-வது இடத்திற்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளது உத்தரபிரதேசம். இன்றைய நிலையில் அகில இந்திய அளவில் அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது உத்தரப்பிரதேசம், 2-ம் இடத்தில் மராட்டியமும், 3-ம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.

இச்சூழ்நிலையில் காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார்கள். மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை நிர்ணயிக்கும் உச்சபட்ச அமைப்பான என்.எம்.சி தேசிய மருத்துவ மேலாண்மை கவுன்சில் அனுப்பியுள்ள முன்னெச்சரிக்கை தற்காலிக சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஏறக்குறைய 60 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட தற்சமயம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 105 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் எண்ணிக்கை அதிகரித்ததனால் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மருத்துவர் களின் தேவையை அறிந்து கொண்டு மருத்துவ படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக மத்திய அரசு நியமிக்க போவதில்லை. ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி தகுதி பெற்றவர்கள் அவர்களின் அடிப்படைத் தகுதிகளில் சில மாறுதல்களை செய்துள்ளது. உதாரணத்திற்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவ ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் என்பதை 4 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது. 

உதவி பேராசிரியர்களாக இருந்து பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதை 8 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கிறது. இது போன்ற ஏற்பாடுகள் செய்வது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நாட்டில் தேவைப்படும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மருத்துவர்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்கும் போது மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் போது மருத்துவ ஆசிரியர் பற்றாக்குறை ஈடு செய்வதற்காக ஏற்கனவே மருத்துவ ஆசிரியர் ஆக பணியாற்ற தகுதி பெற்ற உச்சபட்ச அனுபவ தகுதிகளில் சில ஆண்டுகளை குறைத்து தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே தவிர தகுதியற்றவர்களை மருத்துவர ஆசிரியர்களாக பணியமர்த்தப் போவதில்லை. வழக்கம்போல் இது போன்ற புரிதல் இல்லாமல் ஜெய்ராம் ரமேஷ் போன்ற மூத்த அரசியல்வாதிகள் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

கொரோனா காலத்தில் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு விழிப்புணர்வுடன் செலுத்திக் கொள்ள வைத்து பெரும் உயிர் இழப்பை தடுத்தது நம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. கொரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கும் கொடுத்து உதவியது. உலக நாடுகளெல்லாம் நம் பாரத தேசத்தை வெகுவாக பாராட்டினார்கள். 

அதேபோல மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்துள்ளது பட்ட மேற்படிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மருத்துவ தேவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு மருத்துவப் படிப்புகள் மற்றும் செவிலியர் படிப்புகள் இடங்களையும் அதிகரித்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மத்திய அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து