முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு வங்கி மோசடியை கண்டித்து திருச்சூரில் பாத யாத்திரை நடத்திய நடிகர் சுரேஷ் கோபி

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2023      இந்தியா
Suresh-Gopi 2023-10-03

திருவனந்தபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு வங்கியில் ரூ. 300 கோடி மோசடி நடந்ததைக் கண்டித்து திருச்சூரில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி பாதயாத்திரை நடத்தினார். 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கருவன்னுர் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த வங்கியில் ரூ. 300 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக வடக்கஞ்சேரி நகரசபை மார்க்சிஸ்ட் கவுன்சிலரான அரவிந்தாக்சன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் இந்த மோசடியை கண்டித்தும், வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது. 

கருவன்னூர் கூட்டுறவு வங்கி முன்பிருந்து பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் இந்த பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்டு 18 கி.மீ. தொலைவிலுள்ள திருச்சூர் மாநகராட்சி அலுவலகம் வரை இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து