முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கரையை கடக்கும் புயல்: தயார் நிலையில் ஆந்திரம்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      இந்தியா
Puyal

Source: provided

ஐதராபாத் : ஆந்திராவை நெருங்கும் மிக்ஜம் புயல் காரணமாக தயார் நிலையில் இருக்குமாறு மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 88 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.  வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகள், தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், மிக்ஜம் புயல் ஆந்திரத்தைக் கடக்க உள்ளதால் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புயலால் கனமழை பெய்ய உள்ள திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கோணசீமா, காக்கிநாடா ஆகிய 8 மாவட்டங்களில் 181 நிவாரண முகாம்களை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மிக்ஜம் புயல் ஆந்திரத்தை நெருங்கும் என்பதால் பொது மக்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து