முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டி: மும்பை அணியில் சூர்யகுமார், ஷிவம் துபே

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      விளையாட்டு
Suryakumar 2024-06-21

Source: provided

மும்பை : ரஞ்சி டிராபி காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், ஷிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணி அறிவிப்பு... 

2024-25 ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை - ஹரியானா அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 18 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூர்யகுமார், ஷிவம் துபே...

இந்த அணியில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் ஆல் ரவுண்டருமான ஷிவம் துபேவும் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிவந்த ஷிவம் துபே மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இந்தாண்டுக்கான ரஞ்சி டிராபியில் இதுவரை ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடியுள்ளனர். இவர்களைத் தவிர்த்து 4 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷ் டன்னாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

காலிறுதிக்கு தகுதி...

மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.  42 முறை ரஞ்சி டிராபி சாம்பியனான மும்பை அணி ரோஹ்தக்கில் உள்ள சௌதரி பன்சி லால் கிரிக்கெட் மைதானத்தில் ஹரியானா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

அணி விவரம்...

அஜிங்கியா ரகானே(கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த், ஹார்திக் தாமோர், சூர்யான்ஷ், ஷர்துல் தாக்குர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோவ்சா, ராய்ஸ்டன், அதர்வா, ஹர்சத் டன்னா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து