முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.பி.எஸ். நோய்க்கு திருவள்ளூர் சிறுவன் பலி

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
china 2025-01-04

Source: provided

திருவள்ளூர் : ஜி.பி.எஸ்.  நோய் பாதித்து திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் மரணமடைந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மாவட்டம் முழுவதும் அந்நோய் பரவியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன், ‘கில்லன் பாரே சின்ட்ரோம்’ என்ற ஜி.பி.எஸ்.  நோய் பாதிப்புக்குள்ளாகி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜி.பி.எஸ்.  நோய் தொற்று தமிழகத்துக்கும் பரவியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நோய் பாதித்து, சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து திருவள்ளூா் அருகே திருவூரில் மருத்துவக் குழுவினா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், உலகிலேயே அதிக ஜி.பி.எஸ்.  நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலம் புணேவில், சின்ஹகத் சாலையில்தான் அதிக நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பகுதியைத் தாண்டி, முந்த்வா, கேத், மாவல், சிகாலி என மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பு பரவியிருப்பது சுகாதாரத் துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது மாவட்டம் முழுவதுமிருந்து புதிது புதிதாக நோய் பாதித்து மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், ஜி.பி.எஸ்.  பாதித்த 158 பேரில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மரணமடைந்த 5 பேருக்கு இந்த தொற்று இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. தற்போது புணேவிலிருந்து 31 நோயாளிகளும், இதர கிராமங்களிலிருந்து 83 பேரும், ஊரகப் பகுதியிலிருந்து 18 பேரும், இதர மாவட்டங்களிலிருந்து 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து