முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      விளையாட்டு
Pragnananda 2023-08-25

Source: provided

சென்னை : டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரக்ஞானந்தா சாம்பியன்...

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார். தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

உற்சாக வரவேற்பு... 

இந்நிலையில், டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா  நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த பிரக்ஞானந்தா கூறியதாவது, இந்த போட்டிக்காக சிறந்த முறையில் பயிற்சி பெற்றேன். . இந்த வெற்றியானது, எனக்கு மிகவும் முக்கியமானது . போட்டி மிகவும் கடுமையாக இருந்தது . போட்டியின் போது முடிவெடுக்க குறைவான நேரமே இருந்தது . இந்தாண்டு தொடக்கத்திலேயே எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது . என தெரிவித்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து