முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டினரை நாடு கடத்தும் விவகாரம்: அசாம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி : வெளிநாட்டினரை தடுப்பு மையங்களில் வைத்திருக்கும் வழக்கில், முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா என்று உச்ச நீதிமன்றம் அசாம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்குப் பதிலாக தடுப்பு மையங்களில் காலவரையின்றி வைத்திருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் அசாம் அரசை கடுமையாகக் கண்டித்திருக்கும் உச்ச நீதிமன்றம், அவர்களை நாடு கடத்த முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 63 பேரை நாடு கடத்தும் நடவடிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தொடங்கி, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருவர் வெளிநாட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டதும், அவரை நாடு கடத்தி விடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

"வெளிநாட்டினரின் முகவரி தெரியவில்லை எனக் கூறி நாடு கடத்துவதைத் தொடங்க மறுத்துவிட்டீர்கள். அது ஏன் எங்கள் கவலையாக இருக்க வேண்டும்? நீங்கள் அவர்களை வெளிநாட்டுக்கு நாடு கடத்துங்கள். நீங்கள் முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா?" என்றும் நீதிபதிகள் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து