முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் பிரிமீயர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன ஆஸி. வீராங்கனை அனபெல்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      விளையாட்டு
Australian 2023-12-09

Source: provided

மும்பை : பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல்லை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.

5 அணிகள் பங்கேற்பு...

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

165 வீராங்கனைகள்... 

2-வது டபிள்யூ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச்சில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வீராங்கனைகளின் மினி ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டினர் என்று மொத்தம் 165 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 109 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள். 5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 இடம் காலியாக உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான 9 இடங்களும் அடங்கும். 

2 கோடி ரூபாய்க்கு...

ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், நடந்து முடிந்த ஏலத்தின் முடிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இதனால் அன்னபெல் சதர்லேண்ட் நடப்பு ஏலத்தில் தற்போது வரை அதிக தொகைக்கு ஏலம் போன வீராங்கனையாக உள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயிலை ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து