எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
மும்பை பேட்டிங்....
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.
ரசிகர்கள் அதிர்ச்சி...
ரோஹித் ஷர்மா, நமன் திர், டவால்ட் பிரீவிஸ் என மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இஷான் கிஷன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
ரியான் பராக் அபாரம்...
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களும், ஜாஸ் பட்லர் 13 ரன்களும் எடுத்து வெளியேறினர். சஞ்சு சாம்சன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி, 39 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். மற்றொரு புறம் ரவிச்சந்திரன் அஷ்வின் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். 15.3 ஓவர்களில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போராடுவோம்...
இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் மனம் தளராமல் தொடர்ந்து போராடுவோமென மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியைப் பற்றி ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மனம் தளர்ந்துவிட மாட்டோம். நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். முன்னேறிக் கொண்டே இருப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.
புள்ளிகள் பட்டியலில் முதலிடம்
மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி வரை, ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும், குஜராத் மூன்றில் இரண்டில் வெற்றி பெற்று (ரன்ரேட்) 4-வது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மூன்றில் ஒரு வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. லக்னோ 2 போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்று ஆறாவது இடத்தையும் (ரன்ரோட்), டெல்லி கேப்பிட்டல்ஸ் மூன்றில் ஒரு வெற்றி மூலம் 7-வது இடத்தையும், பஞ்சாப் எட்டாவது இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 இடத்தையும், மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
வரும் 16, 25-ல் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
04 Feb 2025சென்னை : பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.
-
பிப்ரவரி 3-வது வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
04 Feb 2025சென்னை : பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டபேரவை கூடுகிறது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலைஅறிக்கையை தாக்கல் செய்கிறார்.
-
சங்கத்தமிழ் நாள்காட்டி, கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப்பக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
04 Feb 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப்.
-
ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுகிறார்: ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 Feb 2025புதுடில்லி : தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
04 Feb 2025வாஷிங்டன் : மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தபடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜி.பி.எஸ். நோய்க்கு திருவள்ளூர் சிறுவன் பலி
04 Feb 2025திருவள்ளூர் : ஜி.பி.எஸ். நோய் பாதித்து திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் மரணமடைந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மாவட்டம் முழுவதும் அந்நோய் பரவியிரு
-
வெளிநாட்டினரை நாடு கடத்தும் விவகாரம்: அசாம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
04 Feb 2025புதுடில்லி : வெளிநாட்டினரை தடுப்பு மையங்களில் வைத்திருக்கும் வழக்கில், முகூர்த்த நேரத்துக்காகக் காத்திருக்கிறீர்களா என்று உச்ச நீதிமன்றம் அசாம் மாநில அரசிடம் கேள்வி எழு
-
தமிழ்நாடு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
05 Feb 2025சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
-
ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டி: மும்பை அணியில் சூர்யகுமார், ஷிவம் துபே
04 Feb 2025மும்பை : ரஞ்சி டிராபி காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், ஷிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
-
இந்திய அணி குறித்து பாண்டிங்
04 Feb 2025ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக
-
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு
04 Feb 2025சென்னை : டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஒரு நபர் அமைப்பு அல்ல: கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
04 Feb 2025புதுடெல்லி : தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு அல்ல என்று தங்கள் மீதான ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம்
-
வரலாற்றில் முதல் முறை: சி.ஆர்.பி.எப். வீராங்கனைக்கு ஜனாதிபதி மாளிகையில் திருமணம்
04 Feb 2025புதுடில்லி : புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதிமாளிகையில், சி.ஆர்.பி.எப். வீராங்கனை பூனம் குப்தாவுக்கு திருமண வைபவம் நடைபெறவிருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-02-2025.
05 Feb 2025 -
இங்கி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி
04 Feb 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
05 Feb 2025விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
05 Feb 2025சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
உ.பி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
05 Feb 2025லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
-
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலாப்பயணி பலி
05 Feb 2025கோவை: வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2026 தி.மு.க. வெற்றிக்கான முன்னோட்டம் வாக்கு செலுத்திய பிறகு சந்திரகுமார் பேட்டி
05 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் முயற்சி அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
05 Feb 2025சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் முயற்சி செய்வதாக அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள்: டெல்லி வாக்குகளர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை
05 Feb 2025புதுடெல்லி: முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.