முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாற்றில் முதல் முறை: சி.ஆர்.பி.எப். வீராங்கனைக்கு ஜனாதிபதி மாளிகையில் திருமணம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Murmu-

Source: provided

புதுடில்லி : புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதிமாளிகையில், சி.ஆர்.பி.எப். வீராங்கனை பூனம் குப்தாவுக்கு திருமண வைபவம் நடைபெறவிருக்கிறது. இங்கு தனிநபரின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முதல் குடிமகன் வாழும் வீடு, நாட்டின் குடியரசுத் தலைவரின் மாளிகை என பல்வேறு பெருமைகளைக் கொண்ட ஜனாதிபதிமாளிகையில் முதல் முறையாக ஒரு திருமணம் நடைபெறவிருக்கிறது. அதுவும், ஜனாதிபதிமாளிகையில் பாதுகாப்புப் பணிக்கு தலைமையேற்றிருக்கும் சி.ஆர்.பி.எப். வீராங்கனை பூனம் குப்தா, ஜம்மு காஷ்மீரில் பணியில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரரான துணைத் தளபதி அவினாஷ் குமார் திருமணம் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

சி.ஆர்.பி.எப். வீராங்கனை பூனம் குப்தா, தற்போது ஜனாதிபதிமாளிகையின் பாதுகாப்புப் பணியை தலைமையேற்று கவனித்து வருகிறார். இவர், புது டில்லியில் நடைபெற்ற 74வது குடியரசு தின பேரணியில், அனைத்து மகளிர் கான்டினெட் படைகளுக்கும் தலைமையேற்று வழிநடத்தியிருந்தார். பணியில் அவருடைய அர்ப்பணிப்பு, தொழில்திறன் மற்றும் நடத்தை விதிகளைப் பின்பற்றுவதில் உள்ள கண்டிப்பு போன்றவற்றின் காரணமாகவே, அவரது திருமணத்தை ஜனாதிபதிமாளிகையில் நடத்த ஜனாதிபதிதிரௌபதி முர்மு அனுமதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம், நாட்டின் ஜனாதிபதிமாளிகையில் திருமணம் செய்துகொண்ட முதல் பெண்ணாகவும், முதல் சி.ஆர்.பி.எப். வீராங்கனை என்ற பெருமையையும் பூனம் குப்தா பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் புதிய வரலாறும் படைக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம், ஜனாதிபதிமாளிகையில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில், மணமக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் முன்னிலையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து