முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாகீர்கானா ? பாலாஜியா? - இந்திய அணியின் அடுத்த பந்துவீச்சு பயிற்சியாளர்

புதன்கிழமை, 10 ஜூலை 2024      விளையாட்டு
Jakir-Khan-Balaji 2024-07-1

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பந்துவீச்சுப் பயிற்சியாளர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் ஜாகீர்கான், பாலாஜியின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பதவிக்காலம்.... 

டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவர் தொடர்ந்து பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவிக்காததால், கெளதம் காம்பீரை பி.சி.சி.ஐ. தேர்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்நிலையில், தற்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள பாராஸ் மாம்ப்ரேவுக்கு பதிலாக புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளரை நியமிக்கும் வேலையை பிசிசிஐ தொடங்கியுள்ளது.

பிசிசிஐ பரிசீலனை... 

இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமைப் பயிற்சியாளர் காம்பீருடனான் இறுதி ஆலோசனைக்கு பிறகு பந்துவீச்சுப் பயிற்சியாளர் மற்றும் இதர உதவி பயிற்சியாளர்களின் பெயர்களை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாகீர் - பாலாஜி...

இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல், பாலாஜி இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளும், 30 ஒருநாள் போட்டிகளில் 37 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து