Idhayam Matrimony

இஸ்ரேல் படைகள் தாக்குதல்: லெபனானில் பலியானோர் 4 ஆயிரத்தை தாண்டியது

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      உலகம்
Lebanon 2024-10-07

Source: provided

பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது. இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் 2,000-க்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளன. 440 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 100 பேர் குழந்தைகள். 3,100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன.

இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்களின் தாக்குதலுக்கு அஞ்சி லெபனான் மக்கள் அண்டை நாடான சிரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், பெய்ரூட்- டமாஸ்கஸ் சாலையின் முக்கிய பாலங்கள் மற்றும் முக்கிய இடங்களை இஸ்ரேல் அழித்ததால் லெபனான் மக்கள் சிரியாவுக்கு தப்பிச் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இஸ்ரேல் எல்லையை ஒட்டிய லெபனான் பகுதிகளில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளில் இருந்து இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். தற்போது லெபனான் எல்லைக்குள் தரைவழியாக நுழைந்துள்ள இஸ்ரேல் வீரர்கள் சுரங்கப் பாதைகளை கண்டறிந்து குண்டுகள் மூலம் தகர்த்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை 250 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வெடிகுண்டுகள், ஏவுகணைகளை பதுக்கி வைத்திருந்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து