Idhayam Matrimony

ஹமாஸ் தாக்குதலின் முதலாண்டு நினைவு: ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      உலகம்
Israel 2024-10-07

Source: provided

டெல் அவிவ் : பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவினைக் கடைபிடிக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

டெல் அவிவ் முதல் லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் நகரங்களில் ஹமாஸ் தாக்குதலின் முதலாமாண்டு நினைவைக் குறிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலங்கள், நினைவேந்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன. நோவா இசை விழாவில் கடந்த ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலை குறிக்கும் விதமாக டெல் அவிவ் நகரத்தில் மக்கள் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தியும், பிரார்த்தனை செய்தும் கூடியிருந்தனர். அப்போது இசைநிகழ்ச்சி நடத்தியும் அஞ்சலி செலுத்தினர். அந்த அரங்கின் வாயிலில் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் பெரிய திரையில் காட்டப்பட்டன. இதனிடையே தற்காலிக நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதல் நடத்தியும், கடந்த வாரத்தில் ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலடி கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஓராண்டு நிறைவு வந்துள்ளது.

ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதல்: கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் எதிர்பாராத வகையில் ராக்கெட் மற்றும் தரைவழி என பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் ஏவப்பட்டன: காசாவில் இருந்து இஸ்ரேல் பகுதிகள் மற்றும் நகரங்களை நோக்கி 2000-க்கும் அதிகமான ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இது பெரிய அளவிலான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து