Idhayam Matrimony

காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி உதவி

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      உலகம்
Joe-Biden-Benjamin 2023-10-

Source: provided

வாஷிங்டன் : காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் திரளாக வந்திருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென புகுந்த ஹமாஸ் அமைப்பு, ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியது.

இதில், இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பு, அவர்களில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மோதல் நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது.இதனை தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. எனினும், கடந்த ஆண்டு முதல் நடந்து வரும் காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ நிதியுதவியை வழங்கி வருகிறது. இந்த ஓராண்டில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 297 கோடி நிதியுதவியாக இஸ்ரேலுக்கு வழங்கி உள்ளது என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இதுதவிர, ஓராண்டாக அமெரிக்கா சார்பில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு கூடுதலாக, ரூ.40 ஆயிரத்து 807 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இதில், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக போரில் குதித்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கடற்படை நடவடிக்கைகளுக்கான செலவுகளும் அடங்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து