Idhayam Matrimony

சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை சார்பில் புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-07

Source: provided

சென்னை : சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

காவல்துறை சார்பில் 56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 169 காவலர் குடியிருப்புகள், ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக வளாகத்தில் ஒருங்கிணைந்த இணையதள குற்ற ஆய்வக வளாகம் உள்ளிட்ட 2 காவல் துறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் அவர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் 18 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 10 குடியிருப்புகள், சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடங்களையும், தடய அறிவியல் துறை சார்பில் 3 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவுக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து