முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீனா அறிவிப்பு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      உலகம்
Ajith-Doval-2024-07-11

பெய்ஜிங், எல்லையை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.  இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன. 

இந்த நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு சீன வெளியுறவு அமைச்சர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அஜித் தோவலுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், 

சீனாவும், இந்தியாவும், உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட வளரும் நாடுகளாகவும், வளர்ந்து வரும் பொருளாதாரங்களாகவும், இருதரப்பு எல்லைகளைத் தாண்டி உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொண்ட உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. 

எல்லை விவகாரத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும், எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழல்கள் தொடர்பான பிரச்சினைகளை முறையாகக் கையாளவும், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பாதுகாக்கவும் அஜித் தோவலுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து