முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு செப்.9ல் விசாரணை

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

புதுடெல்லி, கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனுவை செப்டம்பர் 9-ல் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை சமர்ப்பித்த பதிலுக்கு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையிலான பெஞ்ச் மேலும் நான்கு வாரக் கால அவகாசம் அளித்துள்ளது. கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், சூழ்நிலையில் சில மாற்றங்கள் இருப்பதாவும், தங்களுக்கு முறையான சட்டப்பூர்வ நேர்காணல் வழங்கப்படவில்லை என்றும் அதற்கான மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறி மறுஆய்வு மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார்.

மறுஆய்வு மனுவை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமித் சர்மா அடங்கிய அமர்வு கூறியுள்ளது. பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக கெஜ்ரிவால் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 2-ம் தேதி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின்னர், ஜூன் 20ல் விசாரணை நீதிமன்றம் பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது, ஆனால் ஜூன் 25ல் அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் உத்தரவை நிறுத்திவைத்தது. இதையடுத்து ஜூன் 26ல் கலால் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது. இந்த நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு செப்டம்பர் 9-ல் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து