முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ் செய்யத் தேவையான பொருட்கள். 

  1. உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
  2. கார்ன் பிளவர் மாவு - 8 ஸ்பூன்.
  3. சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
  4. மிளகு தூள் – 2.1/2 ஸ்பூன்.
  5. மல்லி தூள் - ஒரு ஸ்பூன்.
  6. கோதுமை மாவு - ஒரு ஸ்பூன்.
  7. அரிசி மாவு - ஒரு ஸ்பூன்.
  8. பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்.
  9. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  10. பூண்டுத்தூள் - ஒரு ஸ்பூன். 
  11. இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  12. பொடியாக நறுக்கிய மல்லி இலை – சிறிதளவு.
  13. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4.
  14. முட்டை – 2.
  15. எண்ணெய் - 1/2 லிட்டர். 
  16. உப்பு தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும், தண்ணீர் சூடானவுடன்,1/2 கிலோ உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோல் சீவி நறுக்கி குக்கரில் போட்டு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்கவும். 
  2. வேக வைத்த உருளைக்கிழங்கை வடி கட்டி நீரை நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு உருளைக்கிழங்கை நன்றாக மசித்து கொள்ளவும்.
  3. இதனுடன் 4 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு,சீரகத்தூள் ஒரு ஸ்பூன், மிளகு தூள் 2 ஸ்பூன்,மல்லி தூள் ஒரு ஸ்பூன்,கோதுமை மாவு ஒரு ஸ்பூன், அரிசி  மாவு ஒரு ஸ்பூன்,பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. இதனுடன் பூண்டுத் தூள் ஒரு ஸ்பூன்,தேவையான அளவு உப்பு,இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு மற்றும் பொடியாக நறுக்கிய 4 பச்சை மிளகாயை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. கலந்து வைத்துள்ள மாவை உருண்டையாக உருட்டி  சப்பாத்தி பலகையில்  மாவை வைத்து மாவு நீளமாக வரும் படி நன்கு தட்டி மாவின் நான்கு ஓரங்களில் உள்ள மாவை நீக்கி விட்டு மாவு முக்கோணமாக வரும் படி வெட்டி தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு மற்றும் தேவையான அளவு உப்பு,மிளகு தூள் 1/2 ஸ்பூன் மற்றும் 2 முட்டையை உடைத்து ஊற்றி உடன் சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு தட்டில் ஒரு  நூடுல்சை நன்றாக நொறுக்கி போட்டுக்கொள்ளவும்.
  8. முக்கோணமாக வெட்டி வைத்துள்ள மாவை எடுத்து கார்ன் பிளவர் மாவு மற்றும் முட்டை ஊற்றி கலந்து வைத்துள்ள கலவையில் முக்கி 
  9. எடுத்து பின்னர் நூடுல்சில் போட்டு மாவின் எல்லா பக்கங்களிலும் நூடுல்ஸ் தூள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து  தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  10. இதை போல் எல்லா மாவையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  12. எண்ணெய்  சூடானவுடன்  நூடுல்சில் பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  13. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  14. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  15. சுவையான முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago