முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிரட் உப்மா

Cooking time in minutes: 
20
Ingredients: 
பிரட் உப்மா செய்யத் தேவையான பொருட்கள்.
  1. நறுக்கிய பிரட் துண்டுகள் - 6.
  2. சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்.
  3. பொடியாக நறுக்கிய தக்காளி - 2.
  4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  5. கடுகு - 1/2 டீஸ்பூன்.
  6. பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு.
  7. பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு ஸ்பூன்.
  8. கறிவேப்பிலை - சிறிதளவு.
  9. நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2.
  10. பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்.
  11. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்.
  12. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  13. மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்.
  14. எலுமிச்சை பழ சாறு - 1/ 2 பழம்.
  15. மல்லி இலை - சிறிதளவு. 
  16. எண்ணெய் - 2 ஸ்பூன்
  17. உப்பு - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  2. எண்ணெய்  சூடானவுடன்  1/2 டீஸ்பூன் கடுகுகை போட்டு பொரிக்கவும்,கடுகு  பொரிந்த பின்னர் பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா,பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் பூண்டு போட்டு வதக்கவும்.
  3. இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய  2  பச்சை மிளகாய் 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  4. இதனுடன் தேவையான அளவு உப்பு,சீரகத்தூள் 1/2 ஸ்பூன்.சாட் மசாலா 1/4 டீஸ்பூன் போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் பொடியாக நறுக்கிய 2 தக்காளியை  போட்டு நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு நன்றாக வதக்கவும்.
  7. இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூளை போட்டு நன்றாக வதக்கவும்.
  8. இதனுடன் பாதி எலுமிச்சை பழ சாறை பிழிந்து ஊற்றி,உடன் சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  9. 6 பீஸ் பிரட் துண்டுகளை எடுத்து பிரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இதனுடன் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  10. சிறிதளவு மல்லி இலையை  போட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான பிரட் உப்மா ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago