முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடா?: விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      இந்தியா
Siddaramaiah 2023 04 16

பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் உள்ள மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.

இதில், முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சித்தராமையா மறுத்து வருகிறார். இந்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் சட்ட நிபுணர்களின் ஆலோசனை கேட்டு உள்ளார்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு, சித்தராமையா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 இந்த நோட்டீஸ் குறித்து சித்தராமையா சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கவர்னரும், டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து