முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிறுதிக்கு முந்தைய சுற்று: பி.வி.சிந்து முன்னேற்றம்

புதன்கிழமை, 31 ஜூலை 2024      விளையாட்டு
India 2024 07 31

Source: provided

நடப்பு ஒலிம்பிக் தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு, அதாவது காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. பாரிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான குரூப் சுற்றில் ‘எம்’ பிரிவில் முதலிடம் பிடித்தார் சிந்து. புதன்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்டோனியாவின் கிறிஸ்டின் உடன் விளையாடி இருந்தார். இதில் 21-5, 21-10 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

முன்னதாக, மாலத்தீவின் ஃபாத்திமா உடனான குரூப் சுற்று போட்டியிலும் சிந்து வெற்றி பெற்றிருந்தார். இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஏற்கெனவே ஆடவருக்கான பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தது. தற்போது மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு சிந்து முன்னேறியுள்ளார். இன்று (ஆகஸ்ட் 1) நடைபெறும் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் சீனாவின் ஹி பிங்க் ஜா உடன் சிந்து பலப்பரீட்சை செய்ய உள்ளார். இவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் குரூப் சுற்று போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீரர்கள் பிரனாய் மற்றும் லக்‌ஷயா சென் ஆகியோர் தனித்தனியாக விளையாட உள்ளனர்.

______________________________________________________________________________________________________________

இந்திய வீரர், வீராங்கணைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கணைகள் குத்துச்சண்டி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் பலர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

______________________________________________________________________________________________________________

குத்துச்சண்டை: லவ்லினா வெற்றி

குத்துச்சண்டை 75 கிலோ பெண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார். நார்வே வீராங்கனை ஹோஃப்ஸ்டாடை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி லவ்லினா காலிறுதிக்கு முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 இல் வெல்டர்வெயிட் பிரிவில் (69 கிலோ) லவ்லினா போர்கோஹைன் வெண்கலப் பதக்கம் வென்றார்.  2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் 2012 இல் மேரி கோம் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆவார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 இல், லவ்லினா ஜெர்மனியின் நாடின் அபெட்ஸை 16 ஆவது சுற்றில் தோற்கடித்து, காலிறுதிப் போட்டியில் தைவானின் சென் நியென்-சின்னை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ஆசிய சாம்பியன்ஷிப்போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________________________________________

லக்‌ஷயா சென் முன்னேற்றம் 

ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்‌ஷயா சென் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். குரூப் சுற்று ஆட்டத்தில் உலக பாட்மிண்டன் தரவரிசையில் மூன்றாம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை அவர் வீழ்த்தி அசத்தி இருந்தார். புதன்கிழமை அன்று நடைபெற்ற குரூப்-எல் பிரிவு ஆட்டத்தில் கிறிஸ்டி உடன் விளையாடினார் லக்‌ஷயா. முன்னதாக, பெல்ஜியத்தின் ஜுலியன் கராகியுடன் நேர் செட் கணக்கில் லக்‌ஷயா வெற்றி பெற்றிருந்தார். இதனால் கிறிஸ்டி உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அவர் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் சூழல் இருந்தது. 

சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் 0-5 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்தார் லக்‌ஷயா சென். அதன் பின்னர் ஆட்டத்தில் ஆர்ப்பரித்து எழுந்த அவர், அபாரமாக ஆடினார். அதன் பலனாக 8-8 என லெவல் செய்தார். முடிவில் 21-18 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். முதல் செட்டில் கிறிஸ்டி பலமான போட்டி கொடுத்தார். இரண்டாவது செட்டில் 21-12 என வென்றார் லக்‌ஷயா. அதன் மூலம் ஆட்டத்தில் நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். அவர் தனது முதல் நாக் அவுட் சுற்றில் சக இந்திய வீரர் பிரனாய் உடன் விளையாட வாய்ப்பு உள்ளது.  

________________________________________________________________________

இறுதிப்போட்டியில் இந்திய வீரர்

பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் முன்னேறினார். 50 மீ., ரைபிள் பிரிவில் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.  

______________________________________________________________________________________________________________

அடுத்த சுற்றில் தீபிகா குமாரி 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. 

இந்நிலையில், நேற்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் டச்சு வீராங்கனையை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மன் வீராங்கனையை சந்திக்கிறார்.

______________________________________________________________________________________________________________

ஸ்ரீஜா அகுளா 2வது சுற்றில் வெற்றி

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நேற்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார். அதேபோல், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் 2வது சுற்றில் வென்றார்.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுளா, சிங்கப்பூர் வீராங்கனை செங் ஜியானுடன் மோதினார். இதில் அகுளா 4-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து