முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் புதிய கம்பிவட ஊர்தி சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

புதன்கிழமை, 24 ஜூலை 2024      தமிழகம்
CM-3 2024 07 24

Source: provided

சென்னை : கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலான கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8.3.2024 ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ரூ. 20.30 கோடி செலவில் பக்தர்களுக்கான காத்திருப்பு அறை, மின்தூக்கி, உணவகம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்ட கம்பிவட ஊர்தியானது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோயிலானது 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ.6.70 கோடி செலவில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2.40 கோடி செலவில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்தில் 192 நபர்கள் பயணம் செய்திடும் வகையில் ரூ.9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி மற்றும் அடிப்படை வசதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 24) பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து