முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்:சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Neet 2023-04-20

Source: provided

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு பற்றிய புகார் எழுந்தது. வினாத்தாளை திருடி, அவற்றுக்கு மருத்துவ மாணவர்கள் மூலம் விடை எழுத வைத்து, நீட் தேர்வர்களுக்கு விற்று பணம் சம்பாதித்ததாக தெரிய வந்தது.

இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. பீகாரில் போலீஸ் கைது செய்த 15 பேர் உள்பட பள்ளி அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என 36 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகளுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர் என அதில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில், குற்றச்சதி, திருட்டு, மோசடி, சான்றுகளை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து