தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Duraimurugan 2022 12 11

Source: provided

சென்னை : வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனை பேரிடராக மத்திய அரசு அறிவிக்காதது அவர்களுக்கு இதயத்தில் இருப்பது இதயமா அல்லது கல்லா என தெரியவில்லை.

மேகேதாட்டு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, நானும் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவர் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த அளவுக்கு கூட இல்லை என இப்போதுதான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது என பதிலளித்தார் அமைச்சர் துரைமுருகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து