முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழை வழக்கத்தை விட 59 சதவீதம் அதிகம் : வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      தமிழகம்
rain 2023-05-25

Source: provided

சென்னை : தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 59 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் நேற்று (ஆகஸ்ட்6) வரை சராசரியாக 211 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வழக்கத்தை விட 59 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது.

மாவட்டம் வாரியாக மழை விபரம் (மி.மீ.,):  நீலகிரி 1003.9, கோவை 748, ராணிப்பேட்டை 429, சென்னை 411.7,  திருவள்ளூர் 411.7, காஞ்சிபுரம் 408.2,  செங்கல்பட்டு 337.4, கன்னியாகுமரி 326.6,  வேலூர் 300.7,  திருவண்ணாமலை 262.2.மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து