முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப். 16-க்கு பதில் 17-ம் தேதி மீலாது நபி கொண்டாட்டம் : தலைமை காஜி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
miladi

Source: provided

சென்னை : மீலாது நபி பண்டிகை வரும் 16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

முகமது நபியின் பிறந்த நாளை மீலாது நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகி்ன்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 16-ம் தேதி மீலாது நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மறுநாள் அதாவது 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிவிப்பில், 

செப். 4-ம் தேதி புதன்கிழமை மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால், வெள்ளிக்கிழமை செப். 6-ம் தேதி முதல் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகையால், மீலாது நபி செவ்வாய்க்கிழமை வரும் 17-ம் தேதி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து