முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு: வரும் 24-ம் தேதி பகுஜன் சமாஜ் சார்பில் போராட்டம் அறிவிப்பு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      இந்தியா
Mayavati 2024-12-21

Source: provided

புதுடெல்லி: அம்பேத்கர் குறித்த தனது கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பப் பெற வலியுறுத்தி டிச.24ல் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “நாட்டின் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் சுயமரியாதை, மனித உரிமை, மனிதநேயம் மற்றும் நலனுக்காக அரசியல் சாசனத்தின் அசல் புத்தகத்தை எழுதியவர். கடவுளைப் போல அவர் மதிக்கப்படுகிறார். அவரை அமித் ஷா அவமரியாதை செய்தது மக்களின் மனதை புண்படுத்துகிறது.

மாமனிதரான அம்பேத்கர் பற்றி அமித் ஷா பாராளுமன்றத்தில் பேசிய வார்த்தைகளால், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் மிகுந்த வருத்தமும், கோபமும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். இந்த பின்னணியில், அமித் ஷா தான் கூறியதை திரும்பப் பெற்று, மனந்திரும்ப வேண்டும் என்று அம்பேத்கரிய பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்தது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 24 அன்று நாடு தழுவிய இயக்கத்தை நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. அன்றைய தினம், நாட்டின் அனைத்து மாவட்ட தலைநரங்களிலும் முற்றிலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும். தலித்துகள் தங்கள் சொந்தக் காலில் நிற்கவும் சுயமரியாதையுடன் வாழவும் வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் போராடி, அவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல சட்ட உரிமைகளை வழங்கியவர் அம்பேத்கர்.

காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளால் பாபா சாகேப்பை முழு மனதுடன் மதிக்க முடியவில்லை என்றால், அவர்களும் அவரை அவமதிக்கக் கூடாது. அம்பேத்கரால் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. வகுப்பினருக்கு அரசியலமைப்பில் சட்டப்பூர்வ உரிமைகள் என்று கிடைத்ததோ அன்றே அவர்களுக்கு ஏழு பிறவிகளுக்கு சொர்க்கம் கிடைத்தது.” என தெரிவித்துள்ளார்.

அமித் ஷா பேசியது என்ன?: மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை நடைபெற்​ற அரசியல் சாசனம் குறித்த விவாதத்​தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, “அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர் என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்​டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்​திருந்​தால், சொர்க்​கத்​தில் அவர்​களுக்கு இடம் கிடைத்​திருக்​கும். அம்பேத்​கரின் பெயரை காங்​கிரஸ் எடுத்​துக்​கொள்​வ​தில் பாஜக மகிழ்ச்​சி​யடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்​வுகள் குறித்​தும் காங்​கிரஸ் பேச வேண்​டும்.” எனப் பேசியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து