முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 50 லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
Mathu 2024 09 10

திருமலை, ஆந்திராவில் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அழித்தனர். 

பொதுத்தேர்தலின்போது வாகன சோதனையில் பிடிபட்ட ரூ50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பொக்லைன் ஏற்றி அழித்தனர். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஆவணங்களின்றி கொண்டு சென்ற அதிகளவு பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. 

அதன்படி குண்டூர் மாவட்டம் முழுவதும் நடத்திய வாகன சோதனையில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 24,031 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்த மதுபானங்களை அழிக்கும் பணி நேற்று நடந்தது. நல்லச்செருவில் உள்ள குப்பைக்கிடங்கில் மதுபானங்களை வரிசையாக தரையில் அடுக்கிய போலீசார், காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் அவற்றை பொக்லைன் மூலம் ஏற்றி அழித்தனர். 

இதனையறிந்த சுற்றுவட்டார பகுதியில் இருந்த மதுபிரியர்கள் அங்கு குவிந்தனர். மதுபாட்டில்களை தங்களது கண்ணெதிரே நொறுக்குவதை கண்டு ஏக்கத்துடன் பார்த்தனர். சிறிது நேரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். குறைந்தளவு போலீசார் அங்கு இருந்தனர். இதனை கண்ட மதுபிரியர்கள், மதுபாட்டில்களை போட்டி போட்டு அள்ளினர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனாலும் மதுபிரியர்கள், பாட்டில்களை எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து