முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பல பள்ளிகளுக்கு இ-மெயிலில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      இந்தியா
Boom

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது இந்த வாரத்தின் 3வது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமாகும். இதன்படி, டெல்லியில் கடந்த 11 நாட்களில் 6 முறை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காலை 5.02 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறை, உள்ளூர் போலீஸார், நாய்ப் படைகள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் பள்ளிக்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த பள்ளியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் துவாரகாவில் உள்ள 5 பள்ளிகளுக்கும், மற்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளுக்கும் இதே போன்ற இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து