முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவன் போக மாட்டார் : குமரியில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      தமிழகம்
Appavu 2023-09-12

Source: provided

குமரி : தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவன் போக மாட்டார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரியில்  செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் மூலம் சுமார் 7,500 கோடிக்கு மேல் முதலீடுகள் வந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இந்தப் பயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இது வருங்கால இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

நான் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் எனக்கு சபாநாயகர் பதவியை முதல்வர் வழங்கியுள்ளார் என்று நான் கூறியதாக பா.ஜ.க.வினர் குறைகூறுகின்றனர். தமிழக கவர்னர் இது ஒரு மதசார்புள்ள நாடுதான் எனக் கூறுகிறார். முதலில் அவர்கள் இதற்கு பதில் கூறட்டும் பிறகு நான் பதில் கூறுகிறேன்.

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதை பொறுத்தவரையில் அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். திருமாவளவன் கருத்து குறித்து முதல்வர் தெளிவான விளக்கத்தை கூறி விட்டார். தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளன் போவார் என்பது நடக்காது. மதுவிலக்கு கொள்கையை பற்றி 2016 தேர்தல் அறிக்கைகளில் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து