முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள தி.மு.க. பவள விழா இலட்சினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-3 2024-09-15

Source: provided

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயம் கட்டிடத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ள  தி.மு.க. பவள விழா இலட்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

தி.மு.க.வின் பவளவிழாவையொட்டி தி.மு.க. கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் தி.மு.க.விற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள் தோறும் பறந்திட வேண்டும். தி.மு.க. கொடி பறக்காத திமுகவினர் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கட்சிக்கொடி ஏற்றிக் கொண்டாடுவோம் என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். 

அதன்படி தி.மு.க.வின் பவளவிழாவுக்காக தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தி.மு.க.வின் 75-வது பவள விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயம் கட்டிடத்தின் முகப்பில் பவள விழா இலட்சினை நிறுவப்பட்டுள்ளது.

இந்த இலட்சினையை தி.மு.க. தலைவரும்,  முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் கனிமொழி, தயாநிதிமாறன், எம்.எல்.ஏ.க்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, மாதவரம் சுதர்சனம், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து