முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் டி-20 கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை : கேப்டன் ரோகித் சர்மா திட்டவட்டம்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

சென்னை, மீண்டும் டி-20 கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று கேப்டன் ரோகித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விடை பெற்றார்... 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக அவர் உள்ளார்.

வாய்ப்பு உள்ளதா..?

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரோகித் சர்மாவிடம், டி20 கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து வெளியேறி மீண்டும் விளையாட வாய்ப்புகள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா, "சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு அறிவிப்பு என்பதே நகைச்சுவையாகிவிட்டது. சிலர் ஓய்வை அறிவித்துவிட்டு, திடீரென மீண்டும் விளையாட வந்துவிடுகிறார்கள். இந்தியாவில் அதுபோல் நடப்பதில்லை. ஆனால் மற்ற நாடுகளில் இதுபோன்று செயல்பட்டும் வீரர்களை கவனித்து வருகிறேன். ஓய்வை அறிவித்துவிட்டு உடனடியாக யூ-டர்ன் போடுகிறார்கள்.

உண்மைதான்.... 

அதனால் அந்த வீரர்கள் உண்மையாகவே ஓய்வு பெற்றுவிட்டார்களா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வை அறிவித்தது உண்மைதான். மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பே கிடையாது. டி20 கிரிக்கெட்டில் இருந்து சரியான நேரத்தில் நான் ஓய்வை அறிவித்துவிட்டேன்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து