முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 6 பாதுகாப்புப்படையினர் பலி

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      உலகம்
Pakistan-army

Source: provided

இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப்படையினர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள லதா தெஹ்சில் மிஷ்தா கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து