முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      இந்தியா
India-Meteorological 2022

புதுடெல்லி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது.

இது விசாகப்பட்டினத்திலிருந்து தென்-தென்கிழக்கே சுமார் 430 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 590 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த அமைப்பு மெதுவாக கிழக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதன் தீவிரத்தை தக்கவைத்து, அதன்பிறகு கடலில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றோ அல்லது நாளையோ வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வறண்ட காற்று உதவியுடன் மீண்டும் தமிழக பகுதிகளை ஓரிரு நாட்களில் அடையக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன்மூலம் தமிழக பகுதிகளில் பரவலாக வருகிற 24-ந் தேதிக்கு மேல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், இந்த தாழ்வு பகுதி வலுவிழந்து 26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியமான சூழல் நிலவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து