முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சொத்து வரி உயர்வு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      அரசியல்
Edappadi 2020 11-16

சென்னை, சென்னை மாநகராட்சியில்  ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் தி.மு.க.  ஆட்சியில், அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம். கடந்த 27-ம் தேதி சென்னை மாநகராட்சியில்  ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு.  மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து தி.மு.க. அரசு சென்னை மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன்மூலம் வரி, கழிவு நீர் அகற்றல் வரி என்று அனைத்து வரிகளும், சொத்து வரி உயர்வுக்கேற்ப தானாகவே உயர்த்தப்பட்டு விடும். 

இத்துடன் குப்பைகள் அகற்றும் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்  90 சதவீத சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

 ஆகவே சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வையும், மயான பூமியை தனியார் மயமாக்கும் தீர்மானத்தையும் உடனடியாக திரும்பப் பெறவும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடவும்  திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து