முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்: இதுவரை ரூ.130 கோடி பறிமுதல்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      இந்தியா
Rupees

ஜம்மு, ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலை யொட்டி இதுவரை ரூ.130 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.கே.போல் தெரிவித்துள்ளார்.

அதில், அதிகபட்சமாக காவல் துறை ரூ.107.50 கோடியும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ரூ.2.06 கோடியும், வருமான வரித்துறை ரூ.87 லட்சமும், மாநில கலால் துறை ரூ.50 லட்சமும் பறிமுதல் செய்துள்ளது. மேலும் மொத்தம் 1,263 தேர்தல் விதிமீறல்களில் விசாரணை மற்றும் உரிய நடவடிக்கைகளுக்குப் பிறகு 600 முடித்துவைக்கப்பட்டன என்றும் 364 புகார்கள் விசாரணையில் உள்ளன, அவை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் களமிறங்கியுள்ளன. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி நடந்த தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 56 சதவீத வாக்குகள் பதிவாகின. மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு நேற்று முன்தினம் மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரமும் நிறைவடைந்தது. இன்று 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், முதல் முறையாக இங்கு தேர்தல் நடைபெறுவதால் ஜம்மு காஷ்மீர் மக்கள் யார் பக்கம்? என்ற எதிர்பார்ப்பு நாடெங்கிலும் காணப்படுகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து