முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் அமைதி நிலவுகிறது, ஆனால், இயல்பு நிலை இல்லை : ராணுவ தலைமை தளபதி கவலை

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Upendra-Dwivedi 2024 07 21

Source: provided

புதுடெல்லி : சீன எல்லையில் சூழ்நிலை அமைதியாக உள்ளது. ஆனால், இயல்பானதாக இல்லை என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார். 

கடந்த 2020-ம் ஆண்டு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லியில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி பேசியதாவது,

தூதரக ரீதியில் நேர்மறையான சிக்னல் வருகிறது. ஆனால், அதனை செயல்படுத்துவது என்பது இரு நாட்டு ராணுவ வீரர்கள் எடுக்கும் முடிவை பொறுத்தது. எல்லையில், சூழ்நிலை அமைதியாக உள்ளது. ஆனால் இயல்பானதாக இல்லை. சென்சிட்டிவ் ஆக இருக்கிறது. 

அங்கு 2020-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறோம். இது வரை, அந்த சூழல் வரவில்லை. அங்கு எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து