முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்வின் குறித்து மிட்செல் ஸ்டார்க்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      விளையாட்டு
Mitchell-Starc 2023-12-19

Source: provided

இந்தியாவுக்காக மிகச்சிறந்த பவுலராக அஸ்வின் செயல்பட்டுள்ளார் என்றும், அஸ்வின் எப்போதும் எங்களுடைய அணிக்கு எதிராக முள்ளாக இருந்துள்ளார் என்றும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அஸ்வின் எப்போதும் எங்களுடைய அணிக்கு எதிராக இந்தியாவில் கொஞ்சம் முள்ளாக இருந்தார். அதே போல ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற தொடர்களில் அவரும் இந்திய அணியின் அங்கமாக இருந்தார். இது அற்புதமான கெரியர். அவருடைய கெரியர் கொண்டாடப்படும் என்று உறுதியாக சொல்வேன். அவருடைய சாதனைகள் அவரின் தரத்தை பேசும்.

இந்தியாவுக்காக நீண்ட காலமாக மிகச்சிறந்த பவுலராக செயல்பட்ட அவர் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். நாதன் லயனும் அவரும் நெருக்கமான உறவை வைத்துள்ளார்கள். எங்கள் அணிகளுக்கு இடையே பரஸ்பர மரியாதையும் உள்ளது. திறமையான அவருக்கு அமைந்த இந்த கெரியருக்கு வாழ்த்துக்கள். இது அற்புதமான கெரியர். அது நல்ல வழியில் கொண்டாடப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________________________________

சமன் செய்யுமா ஜிம்பாப்வே அணி?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆப்கானிஸ்தான் தொடரில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் விளையாடும். அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய ஜிம்பாப்வே கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.

_______________________________________________________________________________

பிரித்வி ஷா நீக்கப்பட காரணம்?

பிரித்வி ஷா மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான உண்மையாக காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரித்வி ஷா வேண்டுமென்றே ஒன்றும் மும்பை அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருடைய செயல்கள்தான் அவரது நீக்கத்திற்கான மிக முக்கிய காரணம். பீல்டிங் செய்யும்போது பந்து அவருக்கு அருகில் வந்தால் கூட அதை பிடிப்பதற்கான முயற்சியை அவர் செய்வதில்லை. 

பேட்டிங்கிலும் பந்தை எட்டி அடிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகிறார். அவருடைய உடற்தகுதி, ஒழுக்கமின்மை, அணுகுமுறை எல்லாமே மிகவும் குறைவாக இருக்கிறது. இதுபோன்ற அலட்சியமான வீரரை அணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே நீக்கினோம். சமூக வலைதள பதிவுகள் மூலமோ, தேர்வாளர்களை திசை திருப்புவதன் மூலமோ மீண்டும் அவரை அணியில் இணைத்து விட முடியாது. ஆட்டத்தில் முன்னேற்றத்தை கொண்டுவர அவர் முயற்சி செய்ய வேண்டும் அதுதான் அவருக்கு நல்லது என்றார்.

_______________________________________________________________________________

கிளாசனுக்கு 15 சதவீதம் அபராதம்

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 329 ரன்கள் குவித்து ஆல் - அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய பாபர் அசாம், முகமது ரிஸ்வான், கம்ரான் குலாம் அரைசதம் விளாசி அசத்தினர். பின்னர், இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி 43.1 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 97 ரன்களில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். இதனால், பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. சதம் அடிக்காமல் போன நிலையிலும், கடைசி 7 ஓவர்களில் இலக்கை எட்டமுடியாத விரக்தியில் விக்கெட்டை பறிகொடுத்த கிளாசன் ஸ்டெம்பை எட்டி உதைத்தார். இது அனைவரின் மத்தியிலும் சர்ச்சை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் உபகரணங்களை அவமதிப்பது கிரிக்கெட் விதிகளுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள், உடைகள், தரை உபகரணங்கள் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், ஐசிசி நடத்தை விதிகள் 2.2 ஐ மீறியதற்காகவும் அவரின் ஐசிசி ஒழுக்கப் புள்ளிகளில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. ஹென்ரிச் கிளாசனுக்கு ஐசிசி நடத்தை விதிமுறைகள் லெவல் 1-ஐ மீறியதற்காக அவரது போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________

ஆப்கான் வீரருக்கு அபராதம்

களநடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது ஒருநாள் போட்டியின் போது, ​​நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக ஆப்கானிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி நடத்தை விதியின் லெவல் 1-ஐ மீறியதற்காக ஃபரூக்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே இன்னிங்ஸின் 5-வது ஓவரில், கிரேக் எர்வினுக்கு எதிரான எல்பிடபிள்யூ நிராகரிக்கப்பட்டதால், ஃபரூக்கி நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நடுவரின் முடிவை எதிர்த்தது மட்டுமல்லாமல், போட்டியில் டிஆர்எஸ் இல்லாத போதிலும் ஃபரூக்கி, டிஆர்எஸ் செய்யும் படி கைகளை காட்டினார். அபராதம் தவிர்த்து, அவருக்கு ஒரு ஐசிசி புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஃபரூக்கியும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். 

_______________________________________________________________________________

மீண்டும் கேப்டனாக ரஷீத்கான்

இந்திய பிரீமியர் லீக் தொடர் போலவே உலகமெங்கிலும் 10, 20 ஓவர் தொடர்கள் அதிகளவில் பிரபலமாகிவிட்டன. இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் போலவே தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 (தென்னாப்பிரிக்கா20) போட்டிகளும் மிகவும் பிரபலாமாகி வருகின்றன. 

இந்திய வீரர்கள் தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ள அனைத்து வீரர்களும் இந்தத் தொடரில் விளையாடுகின்றனர். ஐபிஎல்லில் உள்ள கிளப் அணிகளின் உரிமையாளர்கள் அங்கு தங்கள் பிரான்சைஸ்களின் பெயரில் அங்குள்ள நகரங்களுக்கு ஏற்றவகையில் அணிகளை வாங்கியுள்ளனர். டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், எம் ஐ கேப்டவுன், சன்ரைஸ் ஈஸ்டன் கேப், பிரிடோரியா கேபிடல்ஸ், பார்ல் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து