முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளுந்தூர் பேட்டையில் இன்று திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

சென்னை : உளுந்தூர் பேட்டையில் இன்று மாலை திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடக்கிறது. இதில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க விசிக துணைப்பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரும், திருப்போரூர் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.பாலாஜி கூறியதாவது: 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு உளுந்தூர் பேட்டையில் இன்று புதன் கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமை தாங்குகிறார்.  

மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை தலைவர் உ.வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜா, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ரொக்கையா, காங்கிரஸ் எம்.பி.வக்கீல் சுதா, மனித நேய மக்கள் கட்சி மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாத்திமா முசபர், தமிழக வாழ்வுரிமை கட்சி முத்து லட்சுமி வீரப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அய்யா வழி வைகுண்டர் இயக்கம் தலைவர் பால.பிரஜாபதி அடிகளார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். 

பெண்களே நடத்தும் இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு உட்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மது மற்றும் போதை பொருட்களை முற்றாக ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. 

மாநாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீருடையுடன் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்தும் வி.சி.க.வினர், பொதுமக்கள், பெண்கள் என பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து