முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தி குறித்து சர்ச்சை கருத்து: கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      சினிமா
Kangana-Ranaut-2024-10-03

புதுடெல்லி, காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த  பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் ரத்து செய்யப்பட்ட 3 பண்ணை சட்டங்கள் தொடர்பாக கங்கனா ரணாவத் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கள் நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பை கிளப்பிய நிலையில் தனது கருத்துக்களை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார்.

நேற்று முன்தினம் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டன. இந்த நிலையில் தேசப்பிதா மகாத்மா காந்தி என்று எழுதப்பட்ட காந்தியின் சிலை அருகே நின்றபடி நடிகை கங்கனா ரணாவத் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் இந்திய நாட்டில் தேசப்பிதாக்கள் இல்லை. அனைவரும் மகன்கள் தான். மகாத்மா காந்தியும், லால்பகதூர் சாஸ்திரியும் பாரத தாயின் ஆசி பெற்ற மகன்கள்... என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் வாழ்த்து தெரி வித்துள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தி தொடர்பான கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான விமர்சனம் பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.விலும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து