முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் சாலையில் அமர வைத்த சம்பவத்தால் அதிர்ச்சி

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      இந்தியா
UP-school-2024-10-02

லக்னோ, உத்தரபிரதேசத்தில்  கல்விக்கட்டணம் செலுத்தாத 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலையில் அமர வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமரவைத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விக்கட்டணம் செலுத்தாததால் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் சாலையில் கொளுத்தும் வெயிலில் அமர வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

சாலை மற்றும் வயல்களுக்கு அருகில் அசுத்தமான இடத்தில் அமர வைக்கப்பட்டதால், பல மாணவர்கள் கண்ணீருடன் தலைகுனிந்தபடி இருந்துள்ளனர். இதனை வீடியோ எடுத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு அனுப்பிவைத்து மிரட்டியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து