முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் விற்பவர்கள் குறியாக மாறிய குடியிருப்புகள் : தி.மு.க. அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, போதை அரக்கர்களின் பிடியில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதை தி.முக. அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்களை சிந்திக்க விடாமல் போதையிலேயே வைத்திருந்தால் ஆண்டாண்டு காலம் நாமே ஆளலாம் என்ற நப்பாசையில் முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

கஞ்சா, கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன என்றும், இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றங்கள் பெருகுகின்றன என்றும் நான் பலமுறை சுட்டிக்காட்டியும், ஸ்டாலினின் திமுக அரசு இவற்றை கட்டுப்படுத்தவில்லை. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மெத்தனப் போக்கால், சென்னையில் உள்ள அரசின் வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் எனப்படும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், சென்ற மாதம் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக தனியார் கல்லூரிகள் இயங்கும் பகுதிகளில், மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போதைப் பொருள்கள் சுதந்திரமாக கிடைப்பதாக வந்த தகவல்களை அடுத்து காவல் துறையினர் சோதனை நடத்தியதாகச் செய்திகள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்தன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உள்ளன. லட்சக்கணக்கானவர்கள் வசிக்கும் இந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து சமூக விரோதிகள் போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக செய்திகள் வருகின்றன. 

 தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை எதிர்க்கட்சிகள், உயர்நீதிமன்றம், நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் ஸ்டாலினின் திமுக அரசு, போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பெற்றோர்கள் தங்களது மகன் மற்றும் மகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். தங்களது பிள்ளைச் செல்வங்களை போதை அரக்கர்களின் பிடியில் இருந்து காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். அதிகார போதையில், தான் வைத்ததே சட்டம், எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வேன், என்னைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று அகங்காரத்தோடு துக்ளக் தர்பார் நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து