முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரானி கோப்பை டெஸ்ட் தொடர்:சர்பராஸ் கான் அபார ஆட்டத்தால்மும்பை அணி 536 ரன்கள் குவிப்பு

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      விளையாட்டு
2-Ram-51

Source: provided

லக்னோ: மும்பை தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 221 ரன் எடுத்தன் மூலம் 2-ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 536 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோவில்... 

மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ஜெய்ஸ்வால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நேற்று முன்தினம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது.

ரகானே 97 ரன்கள்...

மும்பை தரப்பில் ரகானே 86 ரன் (197 பந்துகள்), சர்பராஸ் கான் 54 ரன் (88 பந்துகள்) எடுத்து களத்தில் இருந்தனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை தொடர்ந்து பேட்டிங் செய்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகானே 97 ரன்னிலும் அடுத்து வந்த ஷாம்ஸ் முலானி 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

சர்பராஸ் - தனுஷ்...

இதையடுத்து சர்பராஸ் கானுடன், தனுஷ் கோட்யான் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் தனுஷ் கோட்யான் அரைசதம் அடித்த நிலையில் 64 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மோஹித் அவஸ்தி ரன் எடுக்காமலும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை 138 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 536 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை தரப்பில் சர்பராஸ் கான் 221 ரன்னுடனும், எம் ஜூனேட் கான் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இரானி கோப்பையில் புதிய சாதனை

மும்பையைச் சேர்ந்த 26 வயதான சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பையில் 2019-2020இல் 928 ரன்கள், 2021-2022-ல் 982 ரன்கள் எடுத்து அசத்தினார். தற்போது இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி 2ஆம் நாளில் 128 ஓவர் முடிவில் 486/8 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃபராஸ் கான் 255 பந்துகளில் 200 ரன்களுடனும் ஷர்துல் தாக்குர் 9 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். இத்துடன் சர்ஃபராஸ் கானின் முதல்தர கிரிக்கெட்டில் 16 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்கும். இரானி கோப்பையில் இரட்டை சதமடித்த முதல் மும்பையை சேர்ந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து