முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: முதலிடத்திற்கு பும்ரா முன்னேற்றம்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      விளையாட்டு
2-Ram-50

Source: provided

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடரை வென்றது...

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டுள்ளது.

ஜெய்ஸ்வால்-கோலி... 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் (792 புள்ளி) 2 இடம் உயர்ந்து 3வது இடத்திற்கும், விராட் கோலி (724 புள்ளி) 6 இடம் உயர்ந்து 6வது இடத்திற்கும் வந்துள்ளனர். ரிஷப் பண்ட் (718 புள்ளி) 3 இடம் சரிந்து 9வது இடத்திற்கு வந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (899 புள்ளி), நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (829 புள்ளி) உள்ளனர்.

ஜஸ்ப்ரீத் பும்ரா...

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா (870 புள்ளி) 1 இடம் உயர்ந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதே சமயம் முதல் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் (869 புள்ளி) 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்தப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (847 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார்.

ஜடேஜா - அஸ்வின்...

டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (468 புள்ளி), ரவிச்சந்திரன் அஸ்வின் (358 புள்ளி) முதல் இரு இடங்களில் உள்ளனர். டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா (124 புள்ளி), இந்தியா (120 புள்ளி), இங்கிலாந்து (108 புள்ளி) அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து