முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போது உடல்நிலை சீராக, நலமுடன் இருக்கிறார்: நடிகர் ரஜினி 2 நாளில் வீடு திரும்புகிறார் : சென்னை, தனியார் மருத்துவமனை அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      சினிமா
Rajini

Source: provided

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், இரண்டு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக உடல்நலத்தில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ற கோணத்திலும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் கசிவு இருந்ததாகவும், ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது அவரது 170வது படமாகும். அடுத்து 171வது படமாக கூலி உருவாகி வருகிறது. அண்மையில் கூட ரஜினி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு கடந்தவாரம்தான் சென்னை திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் (ஆர்டா) ரத்தக் கசிவு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி, ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நல்ல முறையில் முடிக்கப்பட்டதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். இன்னும் 2 நாள்களில் வீடு திரும்புவார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, “ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து