முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா வரும் 16-ம் தேதி பதவியேற்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      இந்தியா
Umar-Abdullah 2024-10-13

Source: provided

 புதுடெல்லி : காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா வரும் 16-ம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. துணை நிலை ஆளுநர் 5 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வார். இதற்கிடையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந் தனையற்ற ஆதரவளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். 

இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலும் தேசிய மாநாட்டுக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியும். எனினும், தேசிய மாநாட்டு கட்சிக்கு காங்கிரஸ் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது காரா  தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா கடந்த 11-ம் தேதி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து உரிமை கோரினார். அப்போது கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் உமர் அப்துல்லாவை முதல்வராக தேர்ந்தெடுத்த கடிதத்தையும் அவர் வழங்கினார். 

இதையடுத்து தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உமர் அப்துல்லா வரும் 16-ம் தேதி புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தற்போது யூனியன் பிரதேசமாக இருப்பதால், புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆவணங்களை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார். அதன் பின்னர் ஜனாதிபதி ஆய்வு செய்த பிறகுமத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்களை அனுப்பி வைப்பார். இந்த நடைமுறைகள் 2 அல்லது 3 நாட்களில் முடிந்து விடும் என்று தெரிகிறது. காஷ்மீரில் உமர் அப்துல்லா கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரியானாவில் வரும் 17-ம் தேதி நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று பா.ஜ.க. மேலிடம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து