முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 33 ஆயிரம் கோடியில் அமெரிக்காவிடமிருந்து 31 நவீன டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      இந்தியா
drone 2024-04-29

Source: provided

புதுடெல்லி : ரூ. 33 ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவிடம் இருந்து 31 பிரிடேட்டர் ரக டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்தியாவின் போர் வலிமையை அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து எம்க்யூ-9பி பிரிடேட்டர் டிரோன்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது. இதற்கு கடந்த வாரம் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. 

இதைத் தொடர்ந்து, ரூ. 33 ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவிடம் இருந்து 31 பிரிடேட்டர் ரக டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அமெரிக்காவின் அட்டாமிக்ஸ் நிறுவனம் டிரோன்களை தயாரித்து வழங்குகிறது. 

மொத்தம் 31 டிரோன்ளில் கடற்படைக்கு 15 கடல் பாதுகாப்பு டிரோன்களும், இந்திய விமானப்படை, தரைப்படைக்கு தலா 8 வான் பாதுகாப்பு டிரோன்களும் வழங்கப்படும்.  இந்த டிரோன்கள் வானில் மிக உயரத்தில் 35 மணி நேரத்துக்கும் அதிகமாக பறக்கக் கூடியது. மேலும் 450 கிராம் வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து