முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 15-ம் தேதி மண்டல பூஜை: சபரிமலையில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்: தேவசம் போர்டு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

Source: provided

திருவனந்தபுரம் : வரும் 15-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு தீவிரமாக செய்து வருகிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்காக பல்வேறு வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது சபரிமலை வரும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

வருகிற 15-ம் தேதி மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. இந்த கால கட்டங்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு தீவிரமாக செய்து வருகிறது.

ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்து விட்டு தாமதமாக பக்தர்கள் வந்தாலும் அவர்களது அறை பறிபோகாது. இதற்காக பம்பையில் சிறப்பு செக்-இன் கவுண்டர் திறக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பயணம் தாமதமானால் 24 மணி நேரம் (திட்டமிட்ட நேரத்திற்கு முன் அல்லது பின்) சலுகை காலம் வழங்கப்படும்.

இதே போல் ஆன்லைன் முன்பதிவில் பிரசாத முன்பதிவும் இடம் பெறும். ஆன்லைன் முன்பதிவு திரும்ப பெறப்பட்டாலும் பிரசாத முன்பதிவுகள் பாதிக்கப்படாமல் இருக்கும். ஒரு பிரசாதம் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால், அந்த நபரின் வங்கி கணக்கில் நேரடியாக தொகை திரும்ப அளிக்கப்படும்.

பக்தர்கள் குடிநீர் தேவைக்காக 3 ஆயிரம் ஸ்டீல் பாட்டில்களை நன்கொடையாளர்கள் மூலம் விநியோகிக்கவும் பம்பையில் உள்ள கவுண்டரில் ரூ. 100 செலுத்தி குடிநீர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மலையில் இருந்து இறங்கிய பிறகு பக்தர்கள் பாட்டில்களை திரும்ப கொடுத்து விட்டு வைப்புத் தொகையை திரும்ப பெறலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து