முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு வீரர் குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      விளையாட்டு
2-Ram-53

Source: provided

புதுடெல்லி: விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாக்கர் உட்பட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி வழங்குகிறார்...

மத்திய விளையாட்டுத்துறை நேற்று அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றிருந்த மனு பாக்கரின் பெயர் இப்பட்டியலில் முதலில் விடுபட்டிருந்தது. ஜனவரி 17ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில், மனு பாக்கர், குகேஷுடன் இணைந்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதினை வழங்குகிறார்.

விருது வழங்க முடிவு... 

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்கு பின்பும் கீழ் கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 17ம் தேதி கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெறுவவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நான்கு பேர் கேல் ரத்னா விருதும், 32 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதும், 3 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும் வழங்கப்பட இருக்கின்றன.

மனு பாக்கரின் பெயர்... 

முன்னதாக, கேல் ரத்னா விருது பெறுவோர் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் விடுபட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 'மனு பாகர் விண்ணப்பிக்கவில்லை,' என மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கூறியிருந்தது. இதனிடையே மனுபாக்கரின் தந்தை ராம் கிஷன், “மனு பாக்கரை துப்பாக்கிசுடுதல் வீராங்கனையாக உருவாக்கியதற்கு பதிலாக கிரிக்கெட் வீராங்கனையாக கொண்டு வந்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார். முன்னதாக மனு பாக்கரும், “நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்ப்பது மட்டுமே என் வேலை.விருதுகளும், அங்கீகாரமும் சிறப்பாக செயல்படுவதற்கான துாண்டுகோலே. ஆனால் விருதுகளை பெறுவது மட்டுமே எனது இலக்கில்லை.” என்று தெரிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து